--- --:--:-- --

ஆன்லைன் வகுப்பு அனைத்து தரப்பினருக்கும் ஏற்றது கிடையாது…!

5

ன்லைன் வகுப்புகளை தரப்படுத்தி சம வாய்ப்பு ஏற்படுத்தி நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

செல்போன் மூலம் ஆன்லைன் பாடம் படிப்பதில் சகோதரிக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால் உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டு நன்னாவரத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது நெஞ்சை கனக்க வைப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

அனைவருக்குமானது அல்ல ஆன்லைன் வகுப்புகள் என்பதை நித்யஸ்ரீயின் மரணம் எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். ஆலங்குடி அடுத்த கிராமத்தை சேர்ந்த ஹரிஷ்மா நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதனால்தான் நீட் தேர்வை பலிபீடம் என்று கூறுவதாக ஒரு குறிப்பிட்டுள்ளார். ஆன்லைன் வகுப்புகளை தரப் படுத்தி சம வாய்ப்பை ஏற்படுத்தி விட்டு தொடர வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon