--- --:--:-- --

வாயில் காயத்துடன் கேரளத்தில் இருந்து மீண்டும் கோவை வந்த மக்னா யானை.சின்ன தடாகம் பகுதி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை !!!

8.1

வாயில் காயத்துடன் கோவையிலிருந்து கடந்த 15ஆம் தேதி கேரளா சென்ற 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை மீண்டும் கடந்த 27ஆம் தேதி கோவை வனப்பகுதிக்கு வந்தது. வாயில் காயம்பட்ட நிலையில் உணவு உட்கொள்ள முடியாமல் இருந்த மக்னா யானைக்கு கடந்த 29ஆம் தேதி முதல் அரிசி மாவு, சத்து மாவு, சோள மாவு ஆகிய உணவில் மாத்திரைகள், குளுக்கோஸ் ஆகிய மருந்துகள் கலந்து சிகிச்சை அளித்து வருவதுடன், கண்காணிப்பு கேமரா பொருத்தி யானை வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

நாக்கு பகுதி சிதறி, அதன் மேல் தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட மக்னா யானை, சின்ன தடாகம் பகுதியில் விளை நிலங்களையும்,குடிசை வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது.

 

அதனால் வனப்பகுதியை ஒட்டி வாழும் மக்கள், வீடுகளில் அரிசி, மாவை இருப்பு வைத்தலை தவிர்ப்பதுடன், வீடுகளில் அடிக்கடி மின் விளக்குகளை குறிப்பாக கலர் விளக்குகளை எரிய விட்டு வைக்க வேண்டும்,மதியம் 12 மணிக்கு மேல் சமைப்பதையும்,இரவு நேரங்களில் வீட்டின் வெளியே உறங்குவதையும் தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

மேலும்,மாத்திரைகள் கலந்த உணவு மட்டுமின்றி வாழை, தர்பூசணி ஆகிய பழங்கள் வழங்கப்படும் எனவும்,மக்னா யானையின் காயம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon