சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நுழைவு அட்டை வெளியிடப்பட்டுள்ளது…!
யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நுழைவு அட்டை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் 31-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு கொரொனா காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு அக்டோபர் மாதம் நான்காம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தேர்வுக்கு மூன்று வாரங்களுக்கு முன் வெளியிடப்படும் நுழைவு அட்டை இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெளியிடப்பட்டுள்ளது. கொரொனா காலகட்டத்தில் தேர்வு நடைபெற உள்ளதால் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தேர்வர் தமக்கான சானிடைசரை எடுத்து வர வேண்டும் என்றும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






