இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் சாலைகளில் கடும் நெரிசல்..!
இ பாஸ் ரத்து ஆனதைத்தொடர்ந்து நேற்று முதல் தமிழ்நாட்டில் உள்ள சாலைகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு படையெடுப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல் நிலவுகிறது.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு உட்பட தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு சுங்க சாவடிகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே கடக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் அதிகரித்துள்ளது. வாகனத்துக்கு தலா 5 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.







