கொம்பன் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் நடிகர் கார்த்தி..!
கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மீண்டும் நடிக்கவுள்ளார். நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த கொம்பன் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.







