--- --:--:-- --

ஆன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை..!

7

ன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

 

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆன்லைன் வகுப்புக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழிகாட்டு விதிகளை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் மாணவர்களின் நலன் காப்பது அனைவரின் பொறுப்பு என்று தெரிவித்தனர்.

 

மேலும் மாணவர்கள் ஆன்லைனில் பாடம் கற்கும் போது ஆபாச இணையதள பாப் அப் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon