வரும் 6ஆம் தேதிமுதல் வழிபாடுகளை தொடங்கும் பெந்தகோஸ்தே ஆலயம்..!
தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல் படி வருகிற 6 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக் கிழமை முதல் கிறிஸ்தவ மதத்துக்கு உட்பட்ட பெந்தகோஸ்து ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழிபாடுகளின் போது தனிமனித இடைவெளி, முககவசம் உள்ளிட்ட அரசு வழிகாட்டுதல்களை கடைபிடிக்கப்படும் என்றும் பெந்தகோஸ்தே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக இடைவெளி, ஸ்கேனர் மூலம் வெப்பநிலையை பரிசோதித்தல், சனிடைசர், முக கவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகளை கடைப்பிடித்துவழிபாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







