--- --:--:-- --

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!

12

மிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டலத்தின் கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சேலம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

 

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, தர்மபுரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்பது வானிலை மையத்தின் கணிப்பு.

 

அரபிக்கடலில் தென்மேற்கு வடகிழக்குப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறை காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

எனவே மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon