நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து ரியாவிடம் 10 மணி நேரம் விசாரணை…!
நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ முதன்முறையாக அவரது காதலி ரியாவிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. மும்பையில் ரியா மற்றும் அவரது சகோதரரிதிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் சுஷாந்த் சிங் உடன் இருவருக்கும் இருந்த தொடர்பு மற்றும் தொழில் தொடங்கியது குறித்து சரமாரி கேள்வி எழுப்பினார்.
காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9 மணி வரை நீடித்தது. விசாரணை முடிந்ததும் நேராக சாண்டா குரூஸ் காவல் நிலையம் சென்ற ரியா தமது வீட்டில் பத்திரிகையாளர்கள் குவிந்து வருவது குறித்து புகார் தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் இருந்து 11 கோடி ரூபாய் மாயமானது குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை நடிகை ரியாவின் வங்கி லாக்கரை திறந்து சோதனை நடத்தியது.
ரியாவின் தந்தை முன்னிலையில் திறக்கப்பட்ட லாக்கரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நண்பர், சமையல்காரர், வீட்டு வேலைக்காரர் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.







