--- --:--:-- --

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு..!

5

மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணம் கூட வசூல் செய்யப்படவில்லை என்றார் .

 

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை பற்றி புகார் கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சூழல் உருவாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக செங்கோட்டையின் கூறியுள்ளார்.

 

ஒன்றாம் வகுப்பில் நடப்பாண்டில் இதுவரை ஒரு லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon