ஒண்ணு தியேட்டர், பஸ், ரயில் எல்லாத்தையும் திறந்து விடுங்க… இல்லாட்டி “டாஸ்மாக்” இழுத்து மூடுங்க..! இல்லைனா போராடுவேன்..! நடிகர் மன்சூர் அலிகான் “வாய்ஸ்”!!
இன்னமும் எவ்வளவு நாளைக்குத்தான் வாயைக் கட்டிக்கிட்டு வீட்டிலேயே இருக்கிறது.. பொழப்பு இல்லாம நடைபிணமா திரியறோம். டாஸ்மாக் கடையை திறந்தது போல தியேட்டர், பஸ், ரயில் எல்லாத்தையும் திறந்து விடணும். இல்லாட்டி டாஸ்மாக்கையும் இழுத்து மூட வேண்டும். இதற்காக போராடப் போகிறேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கெத்தாக வாய்ஸ் கொடுத்துள்ளார்.
சினிமாவில் வில்லத் தனம் செய்யும் நடிகர் மன்சூர் அலிகான், நிஜ வாழ்க்கையில் வித்தியாசமானவர். அரசியலிலும் குதித்து தேர்தலிலும் போட்டியிட்டு, ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடித்தவர். பொதுப் பிரச்னைகளில் முன்னின்று குரல் கொடுப்பது மட்டுமின்றி, வித்தியாசமான போராட்டங்களில் அடிக்கடி ஈடுபடுவது உண்டு.
இந்த கொரோனா காலத்தில், சினிமா படப்பிடிப்புகள் முடங்கி, தியேட்டர்கள் மூடிக் கிடப்பதால், திரையுலகினரும் முடங்கிக் கிடக்கின்றனர். நிலையில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடும் விதமாக மன்சூர் அலிகான் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஐயா முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு வேண்டுகோள்.
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் வாயைக் கட்டிக்கிட்டு முடங்கிக் கிடக்கிறது. வேலை இழந்து எல்லோரும் நடைப்பிணமாக திரிய றோம். வாயைப் பொத்திக்கிட்டா கொரோனா வராதுன்னு சொல்றீங்க.. அப்ப டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டது மாதிரி, தியேட்டர், பஸ், ரயில் எல்லாத்தையும் திறந்து விடுங்கள். இல்லைனா எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடுங்க.. இல்லைனா போராட்டம் தான்.
அதே மாதிரி அது என்ன OTT தளம் என்பதே தெரியலை… அதுல சூர்யா போன்ற பெரிய ஆள்கள் நடித்த படத்த மட்டும் தான் போடுவாங்களா? அ த மட்டும் தான் மக்கள் பார்க்க வேண்டும் என்று சொல்றாங்களா? என்னை மாதிரி சின்ன நடிகர்கள் நடித்த எல்லாப் படத்தையும் OTT யில வெளியிட்டு அதுக்கேத்த தொகையை பிரிச்சு கொடுங்க.. இதுக்கு பிலிம் இன்டஸ்ட்ரியில உள்ளவங்க எல்லாரும் குரல் கொடுக்கணும். இல்லாட்டி 0TT என்ற வெங்காயமே வேணாம் என்ற ரீதியில் மன்சூர் அலிகான் பேசி ஆடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






