நடிகர் பாலாஜி காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்..!
சென்னை காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் தாடி பாலாஜி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தன்னையும் தனது மனைவி நித்யாயையும் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் திட்டமிட்டு பிரித்ததாக கடந்தாண்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்படி கடந்த 13ம் தேதி உதவி ஆய்வாளர் மனோஜ் குமாரும், தாடி பாலாஜியும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அதிவீரராமபாண்டியன் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அப்போது மனோஜ்குமார் தன்னை உடல் மொழியால் தன்னை மிரட்டி அச்சுறுத்தியதாக தாடி பாலாஜி புகார் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் உதவி ஆய்வாளரின் இந்த செய்கைக்கு நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாடி பாலாஜி புகார் அளித்தார்.






