பாண்டா ஈன்ற குட்டி..! கொஞ்சி விளையாடும் காட்சி..!
வாஷிங்டன் தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள சீனாவின் பியூஜியான் என்ற பாண்டா கரடி ஒரு குட்டியை ஈன்று எடுத்த ஐந்து நாட்களே ஆன இந்த குட்டியை மடியில் கிடத்தி தனது நாவால் வருடிய படி அன்பைப் பொழிந்து வரும் வீடியோ காட்சிகள் பூங்காவில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி யுள்ளன.
இந்த காட்சிகள் அந்த ராட்சத விலங்கின் தாயன்பை கண்டு நெகிழ வைக்கின்றன. தாயையும் குட்டியும் காண்பதற்காக பார்வையாளர்கள் பலரும் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.






