--- --:--:-- --

தவறான தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்..! அம்பலப்படுத்திய இந்தியா..!

11

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாத கூட்டம் கடந்த திங்களன்று நடந்தது. இந்த நிலையில் இதில் உறுப்பு நாடாக பாகிஸ்தான் இல்லாத நிலையில் ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் விவாதத்தில் பங்கேற்றதாக தவறான தகவலை பாகிஸ்தான் வெளியிட்டு இருந்தது.

 

இது குறித்து ஐநா சபைக்கு இந்தியா எழுதியுள்ள கடிதத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடுகள் மட்டுமே பங்கேற்ற நிலையில் பாகிஸ்தான் தூதர் எந்த விவாதத்தில் பங்கேற்றார் என்பது தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கூறுவது அனைத்தும் பொய் என்பது வெட்ட வெளிச்சமாக்கி உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

 

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தினால் இந்தியாவே பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறுவது உண்மையல்ல என கூறப்பட்டுள்ளது.

 

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாகவும் ஐ.நா.வில் தடைவிதிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ள இந்தியா 40,000 முதல் 50,000 தீவிரவாதிகள் தங்கள் நாட்டில் இருப்பதாக இம்ரான்கான் ஒப்புக்கொண்டு உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon