பிஎட் படித்த பெண் ஹோட்டலில் சர்வராக இருக்கும் இளைஞனை திருமணம் செய்ததால் தாய் செய்த இரக்கமற்ற காரியம்..!
வேலூர் மாவட்டம் ஏலகிரி மஞ்சக்கொல்லை புதூர் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் அனுராதா. இவரது மகள் நந்தினி பிஎட் படிப்பு முடிந்து விட்டு பயிற்சி ஆசிரியையாக உள்ளார்.
இவரும் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வரும் அச்சுதன் என்பவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் தாய் அனுராதாவிற்கு தெரியவந்தது.
அச்சுதன் தாய், தந்தை இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அனுராதா தனது மகளுக்கு வசதியான வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகளை செய்ய தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 20ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்ட நந்தினி காதலனுடன் கோவைக்கு வந்துள்ளார். அங்கு ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டு ஒன்டிபுதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அச்சுதனின் நண்பர் மூலம் காதல் ஜோடி கோவையில் இருக்கும் தகவல் அறிந்து அனுராதா தனது உறவினர்களுடன் இரண்டு கார்களில் அங்கு சென்றுள்ளார். அங்கு சிறிய வீட்டில் இருந்த தனது மகள் நந்தினியிடமும் மகளின் காதல் கணவன் அச்சுதனிடமும் ஊரறிய திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காரில் ஏற்றி வந்துள்ளனர்.
சேலம் சுங்க சாவடி அருகே ஹோட்டலில் உணவருந்த காத்திருந்த நேரத்தில் தனது மகளை அச்சுதன் பதிவு திருமணம் செய்யவில்லை என்பதும் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து இருப்பதும் அளவிற்கு தெரியவந்துள்ளது.
உணவருந்தி விட்டு வந்த புதுமாப்பிள்ளையை காரில் இருந்து தள்ளிவிட்டு, மகள் நந்தினியை தங்கள் வீட்டிற்கு மீட்டு சென்றுள்ளார் அனுராதா. இதையடுத்து தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாக அனுராதா மீது காவல் நிலையத்தில் புகார் அச்சுதன் புகார் அளித்தார்.
நந்தினி அச்சுதன் திருமணத்திற்கு பதிவுச் சான்றிதழ் இல்லாததால் புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் காதல் படத்தில் வரும் கதாநாயகன் போல விரக்தியுடன் சுற்றி வருகிறார் அச்சுதன்.
நந்தினி மேஜரான பெண் என்பதால் காதலனுடன் சென்றதையும் மீண்டும் தாயுடன் சென்று விட்டது குறித்து கேள்வி எழுப்ப இயலாது என்கின்றனர் காவல்துறையினர்.






