உலகின் முதல் மிதக்கும் கடை திறக்க உள்ள ஆப்பிள் நிறுவனம்..!
சிங்கப்பூரில் ஆப்பிள் நிறுவனம் உலகின் முதல் மிதக்கும் கடை திறக்க உள்ளது. அந்த நாட்டில் 2017 ஆம் ஆண்டு நைட்ஸ் பிரிட்ஜ் கட்டடத்தில் தனது முதல் கடையை ஆப்பிள் நிறுவனம் திறந்தது.
இது தென் கிழக்காசியாவில் திறக்கப்பட்ட முதல் ஆப்பிள் நிறுவன விற்பனையகமாகும். இந்த நிலையில் மெரினாபெ சான்சில் மிதக்கும் சில்லரை விற்பனையகத்தை தங்களது 512வது கடையாக ஆப்பிள் நிறுவனம் திறக்க திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மெரினா விரிகுடாவில் மிதக்கும் கோலத்தில் புதிய கடையை திறக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.







