--- --:--:-- --

இந்தியாவில் கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனை இன்று முதல் தொடக்கம்..!

1

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. புனேவிலுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா இந்த ஆய்வை மேற்கொள்கிறது. இது தவிர மேலும் 17 நகரங்களிலும் இந்த தடுப்பு மருந்து சோதனை நடத்த உள்ளது.

 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், ஆஷ்ட்ரா ஜெனிகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. இந்த மருந்து அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் மீதான சோதனை இன்று தொடங்குகிறது.

 

கோவிஸீல்டு என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தின் இரண்டாவது கட்ட சோதனை சுமார் ஆயிரத்து அறுநூறு பேரிடம் நடத்தப்படும் என தெரிகிறது. இந்த மருந்து ஆரம்ப கட்ட சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்த தடுப்பு மருந்தின் முழுமையான சோதனைகள் நவம்பரில் முடியும் என்றும் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் ஜனவரி தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.

 

கோவிசீல்டு தவிர இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து சென்னை அருகே எஸ்ஆர்‌எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon