சந்தேகம் காரணமாக மனைவி மற்றும் மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்..!
திருச்சி அருகே நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவி மற்றும் மகன் தலையில் கல்லைப் போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமரசம் பேட்டையை அடுத்த துறையை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரியப்பன் சமீபகாலமாக சரியான வேலை கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் அவ்வப்போது மனைவி ராதிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதிகாலை 3 மணியளவில் குடிசை வீட்டின் முன்னே பயன்படுத்திக் கொண்டிருந்த மனைவி ராதிகா மற்றும் 8 வயது மகன் கீர்த்திவாசன் ஆகியோரது தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த மாரியப்பன் மூத்த மகனுடன் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மாரியப்பனை போலீசார் தேடி வருகிறார்கள்.







