தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை..!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் அதனையொட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் வருகிற 25-ஆம் தேதி வரை புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்து இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
வருகிற 25-ஆம் தேதி வரை மத்திய கிழக்கு, மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







