நடிகர் சூர்யா – ஜோதிகா குறித்து அவதூறாக பேசிய மீரா மிதுன் மீது அவரது ரசிகை அளித்துள்ள புகார்..!
சூர்யா ஜோதிகா நட்சத்திர தம்பதி குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரசிகை ஒருவர் சென்னை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற அந்த ரசிகை அம்பத்தூரில் உள்ள சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனது ஆதர்ச நடிகரான சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகியோரைப் பற்றி நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் மீராமிதுன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீமதி கூறியுள்ளார்.







