--- --:--:-- --

தமிழக அரசு மருத்துவமனைகளில் கழிப்பறையில் ஆக்ஸிஜன் வசதி..!

10

மிழக அரசு மருத்துவமனைகளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரின் வசதிக்காக கழிப்பறையில் ஆக்சிஜன் குழாய் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.

 

24 மணிநேரமும் ஆக்ஸிஜன் தேவையாக இருப்பதால் கழிப்பறைகளுக்கு செல்லும் நேரங்களில் போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

 

இதனால் தொடர் சிகிச்சை மூலம் தேறி வருபவர்கள் உடல் நலம் குன்றி அபாயகரமான நிலைக்கு சென்று விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

இதையடுத்து முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைகளுக்கு வெளியே ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon