--- --:--:-- --

சென்னை – சேலம் எட்டு வழி சாலை திட்டம் வழக்கு விசாரணை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

5

சென்னை – சேலம் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

 

சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்த சாலை சட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.

 

வழக்கில் வாதங்களை முன்வைக்க அதிக நேரம் தேவைப்படும் என வழக்கறிஞர்கள் கூறிய போது இன்று அதற்கான நேரம் இல்லாததால் வழக்கு விசாரணையை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

 

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என திட்ட மேலாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon