தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி..!
தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த தலைமை காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்தார். ரவுடி துரைமுத்து என்பவனை பிடிப்பதற்காக காவல்துறையினர் சென்றுள்ளனர்.
அப்போது நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடிதுறை முத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தலைமை காவலர் சுப்பிரமணியம் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுபோல் வெடிகுண்டு வீசிய ரவுடி துறை முத்துவின் கைகளும் வெடித்ததாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
மேலும் சிறப்பு படையினரும் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கூறியுள்ளார்.







