--- --:--:-- --

17 வயது சிறுவன் ஒட்டிய கார்..! பறிபோன சிறுமியின் உயிர்..!

13

திருப்பத்தூர் அருகே 17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பதினோரு வயது சிறுமியின் மீது மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.பெரியாளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மண்டலநாயனகுண்டாவில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

 

உறவினரின் குவாலிஸ் காரை ஒட்டிப் பழகுவதாக கூறி எடுத்துச் சென்ற சிறுவன் அப்பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த11 வயது சிறுமி மீது மோதியதில் சிறுமி அவரது தாய் கண் முன்னே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

 

சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் காரை ஓட்ட கொடுத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon