--- --:--:-- --

உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு..!

10.1

டுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடந்த ஜூன் மாதத்தில் ரத்து செய்ததோடு அவரை வழக்கிலிருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

மேலும் ஜெகதீசன், கலை தமிழ்வாணன், செல்வகுமார் பழனி மணிகண்டன் ஆகிய ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கௌசல்யாவின் தாய், தாய்மாமன் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டது செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

இந்த நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon