--- --:--:-- --

திருச்சியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 100 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்..!

11

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட100 நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் தொண்ணூற்று எட்டு குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளனர்.

 

இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கொரொனா உறுதியானதாக மருத்துவமனையின் முதல்வர் வனிதா கூறியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் பிற மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்த பிறகு குழந்தைகளுடன் கொரொனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 44 தாய்மார்களும் தற்போது நலமுடன் இருக்கின்றனர்.

 

இந்த 44 பேரில் ஒரு குழந்தைக்கு மட்டுமே கொரொனா நோய்த்தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்கு பிறகு அந்த குழந்தையும் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon