அங்கொட லொக்கா வைத்திருந்த உரிமம் இல்லாத கைத்துப்பாக்கி..!
இலங்கை நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா கோவையில் தலைமறைவாக வசித்தபோது உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியை வைத்திருந்ததும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதீப் சிங் என்ற பெயரில் கோவையில் தலைமறைவாக இருந்த அங்கொடா லொக்கா ஜூலை 3ஆம் தேதி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது காதலி, வழக்கறிஞர் சிவகாமசுந்தரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து தனித்தனியே விசாரித்ததில் உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியை வைத்து இருந்ததாக புதிய தகவல் தெரியவந்துள்ளது. அவர் உயிரிழந்த பின் மதுரையில் உள்ள அவரது நண்பரான இலங்கை தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அந்த நபரையும் கைது செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்திய ஆயுதங்கள் சட்டம் குறித்த வழக்கையும் சேர்த்துள்ளவர்கள் விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரவும் முடிவு செய்துள்ளனர்.






