--- --:--:-- --

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையை மீட்ட நாய்..!

15

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது பெண் குழந்தையின் உடல் கிடக்கும் இடத்தை அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாய் மீட்பு படையினருக்கு அடையாளம் காட்டிய கலங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு மீட்பு பணிகள் தொடங்கிய நாள் முதலாகவே நான் அப்பகுதியை சுற்றி சுற்றி வந்துள்ளது.

 

வெள்ளிக்கிழமையன்று சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் நான்கரை கிலோ மீட்டர் தொலைவில் என்று அந்த நாய் சுற்றி சுற்றி வந்துள்ளது. அந்த இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றும் போது அங்கு குழந்தைத் தனுஷ்காவின் உடல் இருந்தது தெரியவந்தது.

 

தன் பிஞ்சுக் கரங்களால் அவ்வப்போது குழந்தையைத் தனுஷ்கா நாய்க்கு உணவளிப்பது வழக்கம் என்று கூறப்படும் நிலையில் அவரது சடலத்தை நாய் கண்டுபிடித்தது கலங்க வைத்தது.

Leave a Reply

Right Menu Icon