புதிய நேரடி வரி விதிப்பு தளத்தை துவக்கம்..! பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கி வைப்பார்..!
வெளிப்படையான வரி விதிப்பு, நேர்மையாளரை மதித்தல் என்பதற்கான தளத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார். நேரடி வரி விதிப்பில் நடை முறைகளை எளிமைப்படுத்தவும் நேர்மையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கவும் அடுத்தகட்ட சீர்திருத்தங்களை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
வெளிப்படையான வரி விதிப்பு, நேர்மையாளரை மதித்தல் தளம் முறையை சீர்திருத்தி எளிமையாக்கும் முயற்சிக்கு வலு சேர்ப்பதாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் நேர்மையான வரி செலுத்துவோருக்கு பலன் அளிக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இது எளிமையான வெளிப்படையான வரிவிதிப்பு நடைமுறைக்கு வழிவகுக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வெளிப்படையான வரி விதிப்பு நேர்மையாளரின் மதித்தல் தளத்தை தொடங்கும் நிகழ்ச்சியின் காணொளி மூலம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.






