காதலித்து கர்ப்பமாக்கி இளம்பெண்ணை ஏமாற்றியவன் கைது..!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இளம்பெண்ணை கற்பழித்த இளைஞன் கைது செய்யப்பட்டான். திருவேடம் காலனியைச் சேர்ந்த ஆன்ஸ்ட்ராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த பெண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்யுமாறு பலமுறை வற்புறுத்தியும் ஆன்ஸ்ட்ராஜ் மறுப்பு தெரிவித்ததால் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனஸ்ட்ராஜ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







