தமிழக காவிரி ஆற்றில் உள்ள ராட்சத மீன்கள்..!
கர்நாடகப் பகுதிகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் ராட்சத அளவிலான மீன்கள் நீந்தி வருகின்றன. தற்போது அந்த மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் ராட்சத அளவிலான மீனொன்று மெதுவாகச் சுழன்று சுழன்று நீந்தி செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.







