குளிர்சாதனப் பெட்டியின் கண்ணாடி தட்டை பயன்படுத்தி ஆன்லைன் கிளாஸ் எடுக்கும் ஆசிரியை..!
குளிர்சாதனப் பெட்டியின் தட்டை பயன்படுத்தி ஆன்லைனில் பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவருக்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிகிறது. கொரொனா பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் ஆன்லைன் வழி கற்பித்தலை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான போதிய வசதி இல்லாத ஆசிரியை ஒருவர் இரு டப்பாக்கள் வைத்து குளிர்சாதனப்பெட்டியின் கண்ணாடி தட்டை வைத்து அதற்கு மேல் செல்போனையும், கீழே பேப்பர்களையும் வைத்து பாடம் எடுக்கும் புகைப்படம் வைரலாகி உள்ளன.
செல்போனை கையில் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மாணவர்கள் தெளிவாக பாடத்தை கவனிக்கும் வகையிலான இந்த கிரியேட்டிவ் ஐடியா இணையத்தில் பலரை கவர்ந்துள்ளது. இது பலரால் பாராட்டப் படுகிறது.







