--- --:--:-- --

டிசம்பர் மாதம் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலர்..!

3

டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலர் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் மனிதவள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

 

அதில் பேசிய மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அம்பேத்காரை இந்த ஆண்டு இறுதிக்குள் கல்லூரியில் தேர்வை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கொரொனா அதிகரிப்பால் டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தாலும் ஜிரோ அகாடமிக் இயர் ஆக அறிவிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

 

தனிமனித இடைவெளியுடன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் கல்வியாண்டை தொடங்க முந்தைய கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொற்று அதிகரித்து வருவதால் கல்வி நிறுவனங்களை திறப்பதில் சிக்கல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

முதற்கட்டமாக கல்லூரிகள் மற்றும் 10 முதல் 12 வரை மட்டும் வகுப்புகளை தொடங்கலாம் என்று தெரிவித்திருந்தாலும் டிசம்பர் மாதம் வரை ஆன்லைன் தொலைக்காட்சி மூலமே வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான இறுதி அறிவிப்பு அடுத்த 15 நாட்களுக்குள் வெளியாகும் என தெரிகிறது. தற்போது 416 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கின்றன.

 

இதன் அடிப்படையிலேயே பள்ளிகளை டிசம்பர் மாதம் வரை திறக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில பள்ளிகளைப் பொருத்த வரையில் கொரொனாவின் தீவிரத்தைப் பொருத்து மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon