--- --:--:-- --

தரம் தாழ்ந்த விமர்சகர்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என கூறிய சூர்யா..!

2

ரம் தாழ்ந்த விமர்சகர்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தை தற்போது மேற்கோள் காட்டியுள்ள சூர்யா தனது தம்பி, தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

நடிகை மீரா மிதுன் விவகாரத்தில் தனக்கு ஆதரவாக கருத்து கூறிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக திரைத்துறையில் நெப்போடிசம் எனப்படும் வாரிசுகளின் ஆதிக்கம் தொடர்வதாக விஜய் மற்றும் சூர்யா மீது நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டியிருந்தார்.

 

நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கது அல்ல என கூறிய பாரதிராஜா கவர்ச்சிகரமான சினிமா துறையில் பெயர் கெட்டு விடாத வகையில் இருவரும் வாழ்ந்து வருவதாக அறிக்கை வெளியிட்டார்.

Leave a Reply

Right Menu Icon