--- --:--:-- --

இந்தியாவில் கொரொனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது..!

12

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் பரவிவரும் கொரானா வைரஸ் தற்போது 10 மாநிலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

மொத்த மதிப்பில் 80% பேர் 10 மாநிலங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 ஆயிரம் பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 22 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 386 ஆக உயர்ந்துள்ளது. கொரொனா பாதித்தவர்களில் 6 லட்சத்து 34 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

 

15 லட்சத்து 35 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். நாடு முழுவதும் 2 கோடியே 45 லட்சம் பேர் கொரொனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon