சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்..!
சென்னையையும் போர்ட்பிளேரையும் இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இலை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக தொடக்கி வைக்கிறார்.
சென்னையையும் அந்தமானில் உள்ள போர்ட்பிளேரையும் கடல் வழியாக இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இலை கேபிள் திட்டத்திற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி போர்ட்பிளேரில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
2300 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரத்து 224 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக தொடக்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நாட்டின் பிற பகுதிகளைப் போன்று செல்போன் சேவை மற்றும் பிராட்பேண்ட் வசதிகள் கிடைக்கும்.







