ஏலத்திற்கு வரும் காந்தியின் கண்கண்ணாடி 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம்..!
1900 ஆம் ஆண்டுகளில் காந்தி அணிந்திருந்ததாக கூறப்படும் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி ஏலத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்தின் ஹேன்ஹாங்காங்கில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் என்ற நிறுவனம் சார்பில் இந்த கண்ணாடி ஏலம் விடப்படுவது அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மதிப்பிற்கு பத்தாயிரம் பவுண்டுகள் முதல் 15 ஆயிரம் பவுண்டுகள் வரை, 9 லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் 14 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் விடப்படலாம் என தெரிய வந்துள்ளது.
இந்த கண்ணாடியை 1910 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளுக்கு இடையே தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்தின் பெட்ரோலிய நிலையத்தில் பணியாற்றிய வாரிசுதாரர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.







