--- --:--:-- --

கோழிக்கோடு விமான விபத்து குறித்து 3 விதமான விசாரணை..!

3

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக மூன்று விதமான விசாரணைகள் நடைபெறும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை விமான விபத்து புலன் விசாரணை அமைப்பு பிரதான விசாரணையை நடத்தும்.

 

அதேநேரத்தில் மத்திய அரசின் விமான நிலையங்களை மேலாண்மை செய்யும் அமைப்பான ஏர்போர்ட்ஸ் அசாரிட்டி ஆஃப் இந்தியா கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்த பிரச்சினைகள் காரணமாக விபத்து நடந்ததா என தனியாக ஒரு விசாரணையை நடத்தும்.

 

மூன்றாவதாக ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா அல்லது விமானங்களின் நடவடிக்கைகளில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா என தனி விசாரணையை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon