--- --:--:-- --

கேரளாவில் ஓடுதளத்தில் மோதி இரண்டாக பிளந்த விமானம்…! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 191 பயணிகள்!!

8abdb612-b4ec-4a29-b92f-0f4ed9191343

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் கனமழையால் வழுக்கிச் சென்று இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். விமானத்தில் இருந்த 191 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்டோர் புதையுண்ட நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில் கனமழை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று ஓடுதளத்தில் மோதி இரண்டாக பிளந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயிலிருந்து பயணிகள், விமான ஊழியர்கள் என 191 பேருடன் இன்றிரவு 7.40 மணிக்கு தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் வழுக்கிச் சென்று நிலை தடுமாறி தரையில் மோதியது.

 

இதில், விமானம் இரண்டாகப் பிளந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துரித கதியில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் விமானி உட்பட சில பயணிகளுக்கு லேசான காயம் தான் எனவும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon