80அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்..!
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே சுமார் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசாரும் தீயணைப்பு துறையினரும் இணைந்து பத்திரமாக மீட்டனர்.
மாரகள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி தன் வீட்டின் எதிரே உள்ள கிணத்தடியில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தகவலறிந்து சென்ற போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.







