--- --:--:-- --

கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று…!

Celebrities Pay Homage to Manorama

Celebrities Pay Homage to Manorama

கலைஞர், முத்தமிழ் அறிஞர் என போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று. தலை சிறந்த தலைவராக மட்டுமல்லாமல் பல தலைவர்களை உருவாக்கும் வல்லமை படைத்தவராக இருந்தவர் கருணாநிதி.

 

13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி வெற்றி பெற்றவர். இந்திய திருநாட்டில் 50 ஆண்டுகாலம் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சாதனையாளர். திருவாரூர் அருகே திருக்குவளையில் முத்துவேலர் அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது மகனாக 1924 ஆம் ஆண்டு பிறந்தார் கருணாநிதி.

 

கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பத்திரிக்கையாளர், அரசியல்வாதி என்று பல்துறை வித்தகராக திகழ்ந்தார். வசீகரன் சொல்லாடல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் ஆளுமையால் முத்தமிழறிஞர் ஆக சிகரம் தொட்டவர் கருணாநிதி.

 

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும், சமத்துவத்தை நிலைநாட்டவும் அரும்பாடுபட்டவர் கருணாநிதி. தமது எழுத்துகளிலும் முற்போக்கு சிந்தனைகளை விதைத்தவர். பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுகவை அடுத்த பரிணாமத்திற்கு அழைத்து சென்றவர். ஒரே நேரத்தில் கட்சியையும் ஆட்சியையும் திறம்பட நிர்வகித்தார் கருணாநிதி.

 

திட்டங்களின் மூலம் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். ரிக்ஸாவில் தொடங்கி பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள் என்று எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி.

 

80 ஆண்டுகால பொது வாழ்வில் பல சோதனைகளையும் நெருப்பாற்றையும் சாதுரியமாக கடந்து வாழ்வின் கடைசி மூச்சுவரை அயராது பணியாற்றிய கருணாநிதி நூறாண்டுகள் கடந்தும் நினைவு கூறப்படுவார் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Right Menu Icon