சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டும் சிசிடிவி காட்சி..!
சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பி சென்ற மூன்று பெயரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். அய்யம்பாளையம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சரவணன் என்கிற சத்தி கோபி கிருஷ்ணா திரையரங்கு சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
நேற்று மாலை சூப்பர் மார்க் எடுக்க தேவையான சரக்குகளை வாகனத்திலிருந்து இறங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் சரவணனை கத்தியால் வெட்டினர். இதில் நிலைதடுமாறிய சரவணன் சுதாரித்துக் கொண்டு உடனடியாக அவர்களை எதிர்த்து தாக்க முயற்சி செய்தார்.
மேலும் அருகில் இருந்த கடையில் வேலை பார்க்கும் ஆட்களும் தாக்குதல் நடத்தி இளைஞர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆனால் கத்தியை காட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.






