--- --:--:-- --

காதல் ஜோடி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..!

7

கள்ளக்குறிச்சி அருகே இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப் பகுதியில் உள்ள அருண் சோலை அம்மன் கோவில் முன்பு இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 

விசாரணையில் இறந்த பெண் செம்பா குறிச்சி கிராமத்தை சேர்ந்த கவிதா என்பதும், இளைஞர் ராமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த குமார் என்பதும் தெரியவந்தது. இருவரும்ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை அரசு கல்லூரியில் பிஏ மூன்றாமாண்டு படித்து வந்தனர். அப்போது இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

 

பொது முடக்கம் என்பதால் இருவரும் சந்திக்க முடியாத சூழலில் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தையும் சகோதரரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

கவிதா கழுத்தில் தாலி இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்னர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon