பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த்தின் மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி..!
பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த் மகனான சுல்தான் ஜெயின் நாராயணன் அகில இந்திய அளவில் இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துள்ளார்.







