--- --:--:-- --

நடிகர் கருணாஸ் உள்பட மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா…! தொற்று பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 24 ஆனது!!

karu
டிகரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் உள்பட மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மட்டும் 24 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. சாமான்யன் முதல் விவிஐபிக்கள் என பலரையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் சென்னை சேப்பாக்கம் , தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

கொரோனா தொற்று

இந்நிலையில் நடிகரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கருணாசின் பாதுகாப்பு உதவியாளருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், அவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ,திண்டுக்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இதேபோல் பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜுக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மட்டும் 24 ஆக உயர்ந்துள்ளது.

 

இதற்கிடையே பிரபல சினிமா பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon