--- --:--:-- --

மயிலாடுதுறையில் தனது 80 வயதிலும் குஸ்தி பயிற்சி கொடுக்கும் முதியவர்..!

11

மயிலாடுதுறையில் தனது 80 வயதிலும் குஸ்தி சண்டையிடும் முதியவர் ஒருவர் தான் கற்ற பாரம்பரிய கலைகளை ஊரடங்கு காலத்தில் சிறுவர்களுக்கு இலவசமாக பயிற்சி பெற்று வருகிறார்.

 

மேலையூர் கிராமத்தை சேர்ந்த கணபதி தனது பனிரெண்டு வயதில் சிலம்பம் கற்கத் தொடங்கினார். குஸ்தி, மருவூர், சுருள், அரிவாள் சுற்றுதல், அரிவாள் வெட்டில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியமிக்க கலைகளை கற்றுத் தேர்ந்த முதியவர் தனது தள்ளாத வயதிலும் ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கும் சிறுவர்களுக்கு தற்காப்பு கலையை இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார் .

 

தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக தற்காப்பு கலையை கற்று தரும் கணபதி தற்காப்பு கலைகளை காக்கவும் வளர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon