--- --:--:-- --

தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன்..!

13

திருவாரூர் அருகே குடிக்க பணம் கேட்டு தராத தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அண்ணனை போலீசார் கைது செய்தனர். கோட்டூர் சந்நிதி தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் மது அருந்திவிட்டு அடிக்கடி குடும்பத்தாரோடு தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

 

நேற்று மதுபோதையில் தனது தம்பி முருக வேலிடம் குடிக்க பணம் கேட்டபோது அவர் இல்லை என்று கூறியதோடு சப்தம் விட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் தம்பியை கத்தியால் குத்தியதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் சிவகுமாரை கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon