கேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் இருவர் கைது..!
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் இருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.
கேரள தங்க கடத்தல் வழக்கில் கடத்தல் தங்கத்தை விற்று பணமாக்கும் வியாபாரியாகவும் தீவிரவாத பின்புறம் உள்ளவராகவும் கருதப்படும் மலப்புரத்தை சேர்ந்த ரமேஷ் கொடுத்த தகவலின்படி தங்க கடத்தல் வழக்கில் முக்கிய தொடர்பாக கருதப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினரான எர்ணாகுளத்தைச் சேர்ந்த முகமது அலி இப்ராகிம் மற்றும் ஏற்கனவே தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கதுறையால் கைது செய்யப்பட்ட ஜமால், சையத் ஆலவி, முகமது ஸாபி, அப்துல் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாலக்காட்டை சேர்ந்த ஷகி, மலப்புரத்தை சேர்ந்த ஷிராபுதீன் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் இதுவரை 12 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. இந்த வழக்கில் தீவிரவாத பின்புல ஆதாரங்கள் அடங்கிய கேஸ் டைரியை கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
என்ஐஏ இதையடுத்து தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






