--- --:--:-- --

காரமடை  ரயில்வே கேட் அருகே பெண் சடலம் கண்டெடுப்பு : காயங்களுடன் பிளாஸ்டிக் “பை”யால் சுருட்டி இருந்ததால் பரபரப்பு  

1228218a-df3b-4aab-ab34-445211a262de

காரமடை கண்ணார்பாளையம் ரயில்வே கேட் அருகே கழுத்தில் காயங்களுடன் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுப்பு.கொலையா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கோவை மாவட்டம் காரமடை கண்ணார்பாளையம் ரயில்வே கேட் அருகே ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சிமெண்ட் தொட்டிகள் கட்டப்பட்டு பல நாட்களுக்கு பிறகு இன்று தங்களது பணிகளுக்காக சிமெண்ட் தொட்டிகளை எடுக்க வாகனங்களுடன் வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

 

சுற்றப்பட்ட நிலையில் சடலம்

சிமெண்ட் தொட்டிக்குள் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

பெண் சடலம்

தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். மேலும்,இச்சம்பவம் குறித்து போலீசார் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தடய அறிவியல் துறையினர் பிளாஸ்டிக் கவரை பிரித்து பார்த்த பொழுது கவருக்குள் கழுத்தில் காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதையும்,சம்பவம் நடந்து 5 நாட்கள் இருக்கும் எனவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்தனர்.

 

பின்னர்,சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

5 நாட்களுக்கு முன்னர்

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிற்கு 35 வயது இருக்கலாம் எனவும்,முழுவதும் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு இப்பகுதியில் 5 நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்து வீசி விட்டு சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

 

கழுத்தில் காயங்கள்

மேலும்,கழுத்தில் காயங்கள் இருப்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கொலையா என கண்டறிய முடியும் எனவும்,கழுத்தில் காயங்கள் இருப்பதால் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

பரபரப்பு

காரமடை கண்ணார்பாளையம் ரயில்வே கேட் அருகே கழுத்தில் காயங்களுடன் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Subscription

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon