--- --:--:-- --

தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை..!

3

கொரொனா வைரஸ் உலக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் கொரொனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் இங்கிலாந்து அரசு மற்றும் அஷ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த தடுப்பூசியை இந்தியாவிலும் தயாரிப்பதற்கான உரிமையை இந்தியன் இன்ஸ்டிடியூட் பெற்றுள்ளது. அது மக்களிடையே பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட பரிசோதனை நடைபெற்றது.

 

இந்த பரிசோதனை மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதனால் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு அடுத்தகட்டமாக செலுத்துவது தொடர்பான ஆய்வுகளை ஒரு குழு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுக்குப் பின்னரே தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய வழங்கும்படி சீடிஎஸ்ஓசி அமைப்பின் நிபுணர் குழு கடந்த 31-ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

 

இந்த நிலையில் இறுதிகட்ட பரிசோதனையில் இன்ஸ்டிட்யூட் பல்வேறு மருத்துவமனைகளில் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon